Friday, October 11, 2013

எல்லாம் முடிந்தது///    எழுதுவதஏகு என்று எதுவும் இல்லை... இதுவே என்னுடைய கடைசி எழுத்தாக கூட இருக்கலாம். ....       இறைவா என்னை மன்னித்து விடு..... என் மேல் அன்பு கொண்டவர்களுm 

Sunday, September 1, 2013

மீண்டும் ஒரு கடிதம்

இந்த முறை பதிவு கொஞ்சம் வித்தியாசமானது.... ஒரு பதிவை 2 மனங்கள் எழுதுகின்றன இன்றோடு மருத்துவமனைக்கு வந்து 1௦ நாட்கள் ஆகின்றன மீண்டும் தனிமையில் இருக்க இருக்க என்னவெல்லாமோ நினைவுகள் எனக்குள் அரங்கேறி இருந்தன. என்னை சுற்றி எத்தனையோ நோயாளிகள். அவர்களின் அருகில் எப்போதும் யாராவது ஒருவர். அவர்களை பார்க்க அடிகடி யாரோ ஒருத்தர் வந்துகொண்டே இருக்கின்றனர் மனிதர்களிடம் அன்பு, அக்கறை இருக்கிறது.... என்னை பார்கிறேன்.. வாட்டர் கேன், பெட், என எல்லாமும் வெறும் பொருட்களுடன்....... நான் மட்டும் தான்...... கடமைக்கான வாழ்கையே போர்க்களம்..... போர்க்களம் மட்டுமே எதிரில்...... எதிரிகளும் இல்லை. போர் தொடர்ந்து கொண்டிருகிறது என்னிடம் தனிமைக்கும் எனக்குமான போர்....... நீண்ட நேரம் நினைத்து நினைத்து நிஜத்தின் வலியை தாங்க முடியாமல் கண்ணீருடன்  விதைத்த பதிவு.........
ellaam maayai... vinthaikuriya krishna salamae hari om namo narayana....

Saturday, November 24, 2012

elllaam maayai

இயல்பான என்னுடைய பதிவுகளை இன்று மீண்டும் திரும்ப படித்ததில் ஒரு மகிழ்வு இருக்கத்தான் செய்கிறது. எங்கே என்னைத் தொலைத்தேன் தெரியவில்லை. இன்று ஏதோ எழுதிட வேண்டும் போல் இருந்தது. அதனால் தான் இரவு 2 மணிக்கு எழுந்து உக்கார்ந்து கொண்டு எழுத தொடங்கினேன்.இன்னும்  பணியில் எதுவும் சேரவில்லை. தேர்வானதுடன் என்னுடைய கடமை முடிந்து போய்விட்டதா? தெரியவில்லை. 2 ஆண்டுகள் ஓடி போய்விட்டன. இன்னும் ஒருவார கால கட்டத்திற்குள் வந்துவிடுவதாக தகவல். எப்போது என்று தெரியவில்லை. காலம்தான் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும் . ஆனால் டைப் செய்வதில் என்னுடைய ஸ்பீட் இன்னும் குறைவது விடவில்லை என்றே நினைக்கிறேன். பணியில் சேர்ந்த பிறகாவது நிறைய எழுத வேண்டும் . இப்போதெல்லாம் மது அருந்துவது மிகவும் அதிகமாகி விட்டது. என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கான விருப்பமும் இல்லை. ஏதோ வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இறைவா ...................................                                            என்னை மன்னித்து விடு .................

விந்தைக்குரிய கிருஷ்ணா சலமே அரி ஓம நமோ நாராயணா....         

Monday, July 30, 2012

திரும்பவும் எழுத தொடங்கி இருக்கிறேன். .  2 ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன .. என்னுடைய வாழ்க்கையை தொலைத்த ஆண்டுகளா? இல்லை என்னில் புதிய வித்துக்களை விதைத்த ஆண்டுகளா என்பது தெரியவில்லை. .. காலம்தான் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் எதுவும் மாறி போய்விடவில்லை.    அதன் அதன் போககில் சென்று கொண்டிருக்கிறது ... என்னடா வாழ்க்கை என்று வழக்கம் போல வரும் அதே அங்கலாய்ப்புகள் மட்டும் என்னிடம் இன்னும் அதிகம் இருக்கிறது.  இறைவா என்னை சீக்கிரம் அழைத்துக் கொள் ...விந்தைக்குரிய கிருஷ்ணா சலமே ஹரி ஓம் நமோ நாராயணா    

Wednesday, February 3, 2010

கையறு நிலை ....

மீண்டும் விர‌க்தியான‌ எண்ண‌ங்க‌ள்... எப்போது நான் ச‌ந்தோஷ‌மாக‌ இருந்தேன்.. விர‌க்தி இன்றைக்கு கொஞ்ச‌ம் அதிக‌மாக‌வே ஆக்கிர‌மித்திருக்கிற‌து. த‌ற்கொலை செய்து கொள்ள‌லாம் என்று மீண்டும் நினைக்கத் தோன்றுகிற‌து. இது ஒருவ‌கையான‌ ம‌னோ நோயாக‌ கூட‌ இருக்க‌லாம்.
எண்ண‌த்தில், சொல்லில், செய‌லில் எல்லாம் இப்போது இந்த‌ விர‌க்தி ப‌ர‌வ‌த் தொட‌ங்கியுள்ள‌து. போதையில் அதை ம‌ற‌க்கிறேன். விளைவு க‌ட‌ந்த‌ சில‌ தினங்க‌ளாக‌ தொட‌ர்ந்து ம‌து அருந்த‌ தொட‌ங்கியிருக்கிறேன். கையில் காசு இல்லாத‌ நேர‌ங்க‌ளில் குறைந்த‌ விலையில் என‌க்குள் போதை ஏற்ப‌டுத்திக் கொள்ள‌ நினைக்கிறேன். என் வாழ்க்கை சிதில‌ம் அடைய‌ தொட‌ங்கியாகி விட்ட‌து... யாருக்காக‌வும் அது நிற்க‌ போவ‌தில்லை.. க‌ண்காணாம‌ல் எங்கேயாவ‌து ஓடி போய் விட‌த் தோன்றுகிற‌து. ம‌ர‌ண‌த்தை தேடும் வ‌ழியில் உட‌லை இட்டு செல்கிறேன். இத்த‌னை க‌ன‌மான‌ உட‌ல், என்னுடைய‌ ஈகோ ... எதுவுமே பிடிக்க‌வில்லை..
ம‌ன‌தை மாற்ற‌ வேண்டும்.. எல்லாவ‌ற்றையும் ம‌ற‌ந்து விட்டு புதிதாக‌ பிற‌க்க‌ வேண்டும் என்று நினைக்கிறேன். எங்கே இற‌ந்தால்தானே ம‌றுப‌டியும் பிற‌க்க‌ ...
இந்த‌ உல‌க‌த்தில் பிற‌ந்து வாழ்ந்து அனுப‌விப்ப‌தை விட‌ க‌ருவிலேயே அழிந்து போகும் பிண‌ட‌ம் சுக‌வாசி... (பைபிள்)
ந‌ட‌ ஒரு கால‌ம் உண்டு, ந‌ட்ட‌தை பிடுங்க‌ ஒரு கால‌ம் உண்டு, விதைக்க‌ ஒரு கால‌முண்டு அறுவ‌டை செய்ய‌ ஒரு கால‌முண்டு.. ந‌கைக்க‌ ஒரு கால‌முண்டு, ந‌கைககாம‌ல் இருக்க‌ ஒரு கால‌முண்டு... எல்லாவ‌ற்றிற்கும் ஒரு கால‌முண்டு.. அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு ஆயிர‌ம் ஆலோச‌னைக‌ள் சொல்ல‌ முடிகிற‌து. ஆனால் த‌ன‌க்கு ஒன்று வ‌ரும் போது அது வெறும் பித‌ற்ற‌ல் என்று தெரிகிற‌து.. என‌க்கு நினைத்த‌தை அடிக்க‌ வேண்டும் என்று ஆசை எதிர்பார்ப்புக‌ள் என்று வாழ்ந்தாகி விட்ட‌து. போங்க‌டா புடுங்கிக‌ளா.. நீங்க‌ளும் உங்க‌ ச‌முதாய‌மும், இந்த‌ வாழ்க்கையும் என்று எரிச்ச‌ல் எரிச்ச‌லாக‌ வ‌ருகிற‌து எல்லாம் த‌னிமையில் இருக்கும் போதுதான்.

Sunday, January 3, 2010

தொலைந்து போன‌ ம‌னித‌ர்க‌ள்...

யோசித்து பார்த்தால் ப‌ல‌ர் எனனுடைய‌ வாழ்க்கை பாதையில் க‌ட‌ந்து சென்றிருக்கிறார்க‌ள். ஒரு கால‌க‌ட்ட‌த்தில் என்மீது அவ்வ‌ள‌வு அன்பு செலுத்திய‌வ‌ர்க‌ள். அதில் சில‌ பேரின் பெய‌ர்க‌ள் கூட‌ ம‌ற‌ந்து விட்ட‌து. ஆனால் நிக‌ழ்வுக‌ள், அவ‌ர்க‌ள் செலுத்திய‌ அன்பு எல்லாம் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் வ‌ந்து போகும். அதையும் ப‌திவு செய்து வைக்க‌ வேண்டும் என்று நினைத்தேன். அத்ன் விளைவுதான்...
எங்க‌ளுடைய‌ ப‌க்க‌த்து வீட்டில் குருவ‌ம்மா என்ப‌வ‌ர் இருந்தார். அம்மாவுக்கு அவ‌ர் நெருங்கிய‌ தோழி. ப‌க்க‌த்து ப‌க்க‌த்து வீடு என்றாலும் கூட‌, இடையில் சுவ‌ர் என்று ஒன்றும் கிடையாது. என‌க்கு நினைவு தெரிந்து அவ‌ர்க‌ள் குடும்ப‌த்தின‌ருட‌ன் ப‌ழ‌கும் வாய்ப்பு மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌து. காக்கா க‌றிசாப்பிட்ட‌து அவ‌ர்க‌ளுடைய‌ வீட்டில்தான். குருவ‌ம்மாவுக்கு அடிக்க‌டி சாமி வ‌ரும், ப‌ற்க‌ளை க‌டித்துக் கொண்டு அவ‌ர் நிற்ப‌தை பார்த்தால் அந்த‌ள‌வுக்கு ப‌ய‌மாக‌ இருக்கும் அந்த‌ சிறு வ‌ய‌தில்.. அவ‌ர்க‌ளுடைய‌ சொந்த‌ ஊர் விருதுந‌க‌ர் அருகே க‌ல்லுப்ப‌ட்டி என்ப‌தாக‌ நியாப‌க‌ம். திரும‌ங்க‌ல‌ம் அருகே இருந்த‌தாக‌ நினைவு. அவ‌ர்க‌ளுடைய‌ ஊரில் அந்த‌ ம‌னித‌ர் பெய‌ரை நினைவில் வைத்துக் கொள்ள‌ முடிய‌வில்லை. ப‌ச்ச‌முத்து என்று நினைக்கிறேன். என் மீது அவ்வ‌ள‌வு அன்பு செலுத்தினார். உற‌வின‌ர்க‌ளை விட‌ என்னைப் பார்க்க‌ வ‌ரும் போதெல்லாம் தின்ப‌ண்ட‌ங்க‌ள் என்று ஒன்று இல்லாம‌ல் வ‌ந்த‌தே இல்லை. இல்லையென்றாலும் வெளியே கூட்டிக் கொண்டு போய் கைக‌ளில் நிறைய‌ தின்ப‌ண்ட‌ங்க‌ளுட‌ன் திரும்பிய‌ ஞாப‌க‌ங்க‌ள் இன்னும் வ‌ந்து போகின்ற‌ன‌.. எல்/கே.ஜி.யில் நான் ப‌ரிசு வாங்கிய‌ ப‌ட‌த்தை அவ‌ருடைய‌ வீட்டில் முன் அறையில் மாட்டி வைத்திருந்தார். அவ‌ர் இப்போது எப்ப‌டி? எங்கே ? என்று தெரிய‌வில்லை.. அவ‌ருட‌னான‌ பிரிவு வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ சேர்ந்து வ‌ள‌ர்ந்த‌து... அடுத்த‌தாக‌ எங்க‌ள் தெருவில் இருந்த‌ காந்திம‌தி.. இவ‌ரும் அம்மாவுக்கு ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ம். ஆனால் பின்னாளில் அப்ப‌டி இல்லை. இவ‌ருடைய‌ வீட்டில்தான் என‌க்கு சாப்பாடு... பாட்டி ‍ இந்த‌ உற‌வவை ம‌ட்டும் முழுவ‌துமாக‌ அனுப‌வித்து பார்க்க‌வில்லையே என்ற‌ ஆத‌ங்க‌மும் உண்டு. மாமியார் ம‌ரும‌க‌ள் ச‌ண்டையில் பாட்டி என்ற‌ அந்த‌ உற‌வு என்னை பொருத்த‌வ‌ரைக்கும் விரோதி என்றே க‌ற்பிக்க‌ப்ப‌ட்ட‌து. நான் என்னுடைய‌ பாட்டியை ரொம்ப‌வே மிஸ் ப‌ன்றேன்.. பாட்டி எனறு கூறி வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வில்லை. "கிழ‌வி" என்று சொல்லுமாறு ப‌ணிக்க‌ப்ப‌ட்டேன். அவ‌ரிட‌ம் இருந்து எதையும் வாங்க‌ கூடாது என்று மிகுந்த‌ க‌ண்டிப்பு.. ஆனாலும் வ‌ருத்த‌மாக‌த்தான் இருந்த‌து.. பாட்டி எங்கோ ஒரு உற‌வின‌ர் வீட்டிற்கு சென்று அங்கு இற‌ந்த‌து...அழுகை வ‌ந்த‌து.. பாட்டியை பொருத்த‌வ‌ரை அப்பா த‌ப்பு செய்து விட்டாரோ என்று நினைப்ப‌துன்டு..
அய்யாத்துரை சித்த‌ப்பா‍‍ ‍‍ என்மீது அவ்வ‌ள‌வு பாச‌ம் வைத்திருந்தார். எப்போதாவ‌து வ‌ருவார். ஆனால் இப்போது அப்ப‌டி இல்லை.. எங்கேயாவ‌து பார்த்தால் எப்ப‌டியா இருக்க‌? என்ற‌ பேச்சுட‌ன் முடிந்து விடுகிற‌து. ராமாத்தாள் ‍வீட்டிக்கு ப‌க்க‌த்தில் இருந்த‌ பெண். ல‌ட்சுமி, என்று ப‌ட்டிய‌ல் இருந்தாலும் ப‌ழைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நினைவுக்கு வ‌ர‌ ம‌றுக்கிற‌து
]

Monday, December 28, 2009

ஏதோ தெரியவில்லை.. மனம் மிகவும் பாரமாக..

ம‌ன‌ம் மிக‌வும் பார‌மாக‌ இருக்கிற‌து.. ஏன் என்று தெரிய‌வில்லை.. எப்போதும் இல்லாத‌ அள‌விற்கு விர‌க்தியுட‌ன் ம‌னோ நிலை.. யாரிட‌மும் பேச‌த் தோன்ற‌வில்லை. ம‌ன‌துக்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ள் என்று நினைத்திருப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ இன்று அந்நிய‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌ர். ஏன் என்று கார‌ண‌ம் புரிய‌வில்லை..
வ‌ழ‌க்க‌மாக‌ வ‌ருட‌த்தின் இறுதி நாட்க‌ளில் ச‌ந்தோஷ‌ம் என்னிட‌த்தில் இருந்த‌ நாட்க‌ள் எத்த‌னையோ இருந்த‌ன‌. ஆனால் இப்போது எல்லா நாட்க‌ளும் ஒன்றே என‌ உண‌ர‌ப்ப‌டுகிற‌து. எந்த‌ நாட்க‌ளிலும் ச‌ந்தோஷ‌ம் இல்லை. நான் சிரிக்கிறேன். வாய்க‌ள் ம‌ட்டும், உத‌டுக‌ள் ம‌ட்டும் அத‌ன‌த‌ன் வேலையை செய்கின்ற‌ன‌. ஆனால் உள்ளுக்குள் அமைதியாய் என்னால் என்னை உண‌ர‌ முடிகிற‌து. அதுவே சில‌ நேர‌ங்க‌ளில் ம‌ன‌ விர‌க்திக்கும் கார‌ண‌மாகி விடுகிற‌து. என்ன‌ வாழ்க்கை, ச்சீ என்ன‌ ம‌னித‌ர்க‌ள் என்ற‌ வெறுப்பு. யாரிட‌மும் பேச‌ப்பிடிக்காம‌ல் த‌னிமையை ஏற்ப‌டுத்திக் கொண்டு, உட்கார்ந்திருப்ப‌து.. பின்ன‌ர் அந்த‌ த‌னிமையே வெறுத்தும் போகிற‌து.. அப்போதைய‌ கால‌ கட்ட‌த்தில் ம‌ன‌து தூண்ட‌ப்ப‌டும் ஒரு விஷ‌ய‌ம் த‌ற்கொலை. இத்த‌னை முக‌மூடி ம‌னித‌ர்க‌ளையும், ச‌ராச‌ரி நிக‌ழ்வுக‌ளையும் ச‌கித்துக் கொண்டு ஏன் இந்த‌ வாழ்க்கை.. அன்பு பாச‌ம், உற‌வுக‌ள், ந‌ட்புக‌ள் என‌ எதுவுமே உண்மையாயு இல்லாத‌ போது ஏன்? என்னுடைய‌ பிற்ப்புக்கான‌ கார‌ண‌ம்? இப்போதெல்லாம் என்னுடைய‌ பால்ய‌ ப‌ருவ‌ நிக‌ழ்வுக‌ளை ஏதாவ‌து ஒன்று நினைவுப‌டுத்தி செல்கிறது. அடிக்க‌டி நான் உண‌ருகிறேன். மெல்லிய‌ தூக்க‌த்தில், சின்ன‌ஞ்சிறிய‌ வ‌ய‌தில் என்னை சுற்றி இருந்த‌ வாச‌ங்க‌ள், ம‌னித‌ர்க‌ள், கால‌நிலை என்று அவ்வ‌ப்போது அதை அதிக‌மாக‌ உண‌ருகிறேன். கார‌ண‌ம் தெரிய‌வில்லை. வெறும் வினாக்க‌ள் ம‌ட்டுமே இருக்கின்ற‌ன‌.. விடைக‌ளை தேடி ப‌ய‌ணிக்க‌வும் இல்லை. அதை தேடும் வ‌ழியும் தெரிய‌வில்லை.
கேள்விக‌ளுக்கான‌ விடையை தெரிந்து கொள்ள‌ முடியாம‌லேயே இந்த‌ வாழ்க்கை நின்று போகும். ஒரு நாள் மர‌ண‌ம் என்னை ஆக்கிர‌மிக்கும். அத்துட‌ன் இந்த‌ உண‌ர்வுக‌ள், உண‌ர்ச்சிக‌ள் என‌ அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி. அத‌ன் பிற்கு எந்த‌ எதிர்பார்ப்புக‌ளும் இல்லை, ஏமாற்ற‌ங்க‌ளும் இருக்க‌ போவ‌தில்லை.. இப்ப‌டியாக‌ எல்லாம் சிந்திக்க‌ தோன்றுகிற‌து. போதைப்ப‌ழ‌க்க‌த்திற்கு அடிமையாக‌ இருக்க‌ ம‌ன‌ம் தூண்டப்ப‌டுகிற‌து. ஆனால் கைக‌ளில் காசில்லை. வ‌ர‌லாறு காணாத‌ வ‌றுமை... நானா? இப்ப‌டி என்று சிந்தித்து பார்த்தேன் நேற்று, அழுகை வ‌ந்த‌து. விர‌க்தி வெறும் விர‌க்தி...
ப‌ண‌த்திற்காக‌, பத‌விக்காக‌, உட‌ல் சுக‌த்திற்காக‌, அதிகார‌ சுக‌த்திற்காக‌ அலையும் என்னை சூழ்ந்த‌ இந்த‌ ச‌மூக‌த்தில் எத‌ற்கு ஆசைப்ப‌ட‌ என்று தோன்ற‌வில்லை.. ம‌ன‌ம் சில‌ நேர‌ங்க‌ளில் வ‌ன்முறையாக‌வும், ப‌ல‌ நேர‌ங்க‌ளில் எரிச்ச‌லுட‌னும் இருக்கிற‌து. இறைவா ... என‌க்கு வாழ‌ப்பிடிக்க‌வில்லை... ப்ளீஸ் எஜ்ன்னை சீக்கிர‌ம் அழைத்துக் கொள்ளேன்.
இன்னும் எத்த‌னை வ‌ருட‌ங்க‌ளுக்கு இப்ப‌டியே ந‌டித்துக் கொண்டிருப்ப‌து.. ர‌த்த‌ம், ச‌தை இந்த‌ உட‌ல் என்று இத‌ற்காக‌த்தான் இந்த‌ ந‌டிப்பு. வெறும் உட‌ல் ம‌ட்டிமே வாழ்க்கையை அனுப‌வித்து கொண்டிருக்கிற‌து. அதில் வேண்டா வெறுப்பாக‌ நான் இருக்கிற‌து. எல்லாவ‌ற்றின் மீது ப்ற்று த‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து.
ஒவ்வொரு கால‌த்திலும் ஒவ்வொன்றின் மீது என‌க்கு அள‌வ‌ற்ற‌ ஆசை இருந்த‌து. ப‌ள்ளி கால‌த்தில் க‌த்த, சைக்கிள், தொப்பி, பொம்மை துப்பாக்கி என்று சின்ன‌ச்சின்ன‌ ஆசைக‌ள் இருந்த‌ன‌. ப‌ருவ‌ வ‌ய‌தில் தோன்றிய‌து ஒரே ஆசை க‌விதா. சாப்பாட்டை பொறுத்த‌வ‌ரை வித‌ம வித‌மாய் சாப்பிட‌ வேண்டும் என்ற‌ ஆவ‌ல் இருந்த‌து. ஆனால் இப்போதெல்லாம் எத‌ன் மீதும் ஆசை இல்லை. விருப்ப‌ம் குறைந்து கொண்டே போகிற‌து. செக்ஸ் மீது கூட‌ ஒரு வித‌ வெறுப்பு. உட‌லிய‌ல் சுக‌த்திற்காக‌த்தான் இநத‌ வாழ்க்கையோ என்னும்ப‌டி அதை சுற்றியே ந‌க‌ரும் இந்த‌ ச‌முதாய‌ம்... க‌ண்ணை மூடி தியானிக்க‌ நினைத்தாலும் த‌ற்போது முடிவ‌தில்லை.. எல்லாம் மாயை எல்லாம் பிர‌மை,,, நான் எழுதுகின்ற‌ இந்த‌ எழுத்துக்க‌ளும் ப‌டிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு பிர‌மைதான். என்னைச சுற்றி எல்லாம் மாயை.. மாயை... இந்த‌ உட‌ம்பு, க‌ம்ப்யூட்ட‌ர் என்னை சுற்றிலும் ப்ர‌வி இருக்கும் இந்த‌ ஒளி... என்னுடைய‌ உட‌ல்... நான் பேசும் இந்த‌ மொழி என்னைச் சிந்திக்க‌ தூண்டும் ம‌ன‌ம் என்று சொல்லிக் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் விஷ‌ய‌ங்க‌ள் அனைத்துமே மாயை... மாயை....
என்னுடைய‌ வாழ்க்கையில்; அதாவ‌து நான் இதுவ‌ரை க‌ட‌ந்து வ‌ந்திருக்கும் இந்த‌ 27 வ‌ருட‌ கால‌ ப‌ய‌ண‌த்தின் முடிவு என்று இருக்கும்.. அதைத் தேடி உற்சாக‌மாக‌ என்னுடைய‌ ப‌ய‌ண‌ம் இன்னும் தொட‌ரும்... எது ந‌ட‌ந்த‌தோ அது ந‌ன்றாக‌வே ந‌ட‌ந்த‌து எது ந‌ட‌க்கின்ற‌தோ அது ந‌ன்றாக‌வே ந‌ட‌க்கின்ற‌து.. எது ந‌ட‌க்க‌ இருக்கின்ற‌தோ அதுவும் ந‌ன்றாக‌வே ந‌ட‌க்கும்ப்; கீதை.
27‍ந் தேதி வ‌ண்டியில் சென்று கொண்டிருக்கும் போது வான‌த்தில் பார்த்த‌ காட்சி என‌க்குள் எதையோ உயிர்ப்பித்த‌து. ப‌ல்வித‌மான‌ சிந்த‌னைக‌ள் வ‌ந்து போயின‌. நான் யார்? க‌ண்க‌ளை மூடினால் வெறும் இருட்டாக‌ தெரிகிற‌தே அதுவா> இல்லை, இப்ப‌டி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே ப‌க்க‌த்தில் யாராவ‌து உட்கார்ந்திருப்பார்களோ என‌ நினைத்துக் கொண்டே இய‌ங்குகிற‌தே ஒரு ம‌ன‌ம் அதுவா? என் வாழ்வு சிதில‌ம் அடைந்து கொண்டிருக்கிற‌து. என‌க்கு கொடுத்த‌ உட‌லை நான் சீர‌ழித்து கொண்டிருக்கிறேன என்ப‌து ம‌ட்டும் என‌க்குத் தெரிந்த‌ நிச்ச‌ய‌மான‌ ஒன்று..
இப்ப‌டியாக‌த்தான் இருக்க‌ வேண்டும் வேறு என்ன‌ செய்து விட‌ முடிகிற‌து. எதுவுமெ என்கையில் இல்லாத‌ போது அனுப‌விப்ப‌து ஒன்றைத் த‌விர‌ நான் பெரிதாக‌ என்ன‌ செய்து விட‌ முடியும்...