Wednesday, February 3, 2010

கையறு நிலை ....

மீண்டும் விர‌க்தியான‌ எண்ண‌ங்க‌ள்... எப்போது நான் ச‌ந்தோஷ‌மாக‌ இருந்தேன்.. விர‌க்தி இன்றைக்கு கொஞ்ச‌ம் அதிக‌மாக‌வே ஆக்கிர‌மித்திருக்கிற‌து. த‌ற்கொலை செய்து கொள்ள‌லாம் என்று மீண்டும் நினைக்கத் தோன்றுகிற‌து. இது ஒருவ‌கையான‌ ம‌னோ நோயாக‌ கூட‌ இருக்க‌லாம்.
எண்ண‌த்தில், சொல்லில், செய‌லில் எல்லாம் இப்போது இந்த‌ விர‌க்தி ப‌ர‌வ‌த் தொட‌ங்கியுள்ள‌து. போதையில் அதை ம‌ற‌க்கிறேன். விளைவு க‌ட‌ந்த‌ சில‌ தினங்க‌ளாக‌ தொட‌ர்ந்து ம‌து அருந்த‌ தொட‌ங்கியிருக்கிறேன். கையில் காசு இல்லாத‌ நேர‌ங்க‌ளில் குறைந்த‌ விலையில் என‌க்குள் போதை ஏற்ப‌டுத்திக் கொள்ள‌ நினைக்கிறேன். என் வாழ்க்கை சிதில‌ம் அடைய‌ தொட‌ங்கியாகி விட்ட‌து... யாருக்காக‌வும் அது நிற்க‌ போவ‌தில்லை.. க‌ண்காணாம‌ல் எங்கேயாவ‌து ஓடி போய் விட‌த் தோன்றுகிற‌து. ம‌ர‌ண‌த்தை தேடும் வ‌ழியில் உட‌லை இட்டு செல்கிறேன். இத்த‌னை க‌ன‌மான‌ உட‌ல், என்னுடைய‌ ஈகோ ... எதுவுமே பிடிக்க‌வில்லை..
ம‌ன‌தை மாற்ற‌ வேண்டும்.. எல்லாவ‌ற்றையும் ம‌ற‌ந்து விட்டு புதிதாக‌ பிற‌க்க‌ வேண்டும் என்று நினைக்கிறேன். எங்கே இற‌ந்தால்தானே ம‌றுப‌டியும் பிற‌க்க‌ ...
இந்த‌ உல‌க‌த்தில் பிற‌ந்து வாழ்ந்து அனுப‌விப்ப‌தை விட‌ க‌ருவிலேயே அழிந்து போகும் பிண‌ட‌ம் சுக‌வாசி... (பைபிள்)
ந‌ட‌ ஒரு கால‌ம் உண்டு, ந‌ட்ட‌தை பிடுங்க‌ ஒரு கால‌ம் உண்டு, விதைக்க‌ ஒரு கால‌முண்டு அறுவ‌டை செய்ய‌ ஒரு கால‌முண்டு.. ந‌கைக்க‌ ஒரு கால‌முண்டு, ந‌கைககாம‌ல் இருக்க‌ ஒரு கால‌முண்டு... எல்லாவ‌ற்றிற்கும் ஒரு கால‌முண்டு.. அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு ஆயிர‌ம் ஆலோச‌னைக‌ள் சொல்ல‌ முடிகிற‌து. ஆனால் த‌ன‌க்கு ஒன்று வ‌ரும் போது அது வெறும் பித‌ற்ற‌ல் என்று தெரிகிற‌து.. என‌க்கு நினைத்த‌தை அடிக்க‌ வேண்டும் என்று ஆசை எதிர்பார்ப்புக‌ள் என்று வாழ்ந்தாகி விட்ட‌து. போங்க‌டா புடுங்கிக‌ளா.. நீங்க‌ளும் உங்க‌ ச‌முதாய‌மும், இந்த‌ வாழ்க்கையும் என்று எரிச்ச‌ல் எரிச்ச‌லாக‌ வ‌ருகிற‌து எல்லாம் த‌னிமையில் இருக்கும் போதுதான்.