Sunday, January 3, 2010

தொலைந்து போன‌ ம‌னித‌ர்க‌ள்...

யோசித்து பார்த்தால் ப‌ல‌ர் எனனுடைய‌ வாழ்க்கை பாதையில் க‌ட‌ந்து சென்றிருக்கிறார்க‌ள். ஒரு கால‌க‌ட்ட‌த்தில் என்மீது அவ்வ‌ள‌வு அன்பு செலுத்திய‌வ‌ர்க‌ள். அதில் சில‌ பேரின் பெய‌ர்க‌ள் கூட‌ ம‌ற‌ந்து விட்ட‌து. ஆனால் நிக‌ழ்வுக‌ள், அவ‌ர்க‌ள் செலுத்திய‌ அன்பு எல்லாம் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் வ‌ந்து போகும். அதையும் ப‌திவு செய்து வைக்க‌ வேண்டும் என்று நினைத்தேன். அத்ன் விளைவுதான்...
எங்க‌ளுடைய‌ ப‌க்க‌த்து வீட்டில் குருவ‌ம்மா என்ப‌வ‌ர் இருந்தார். அம்மாவுக்கு அவ‌ர் நெருங்கிய‌ தோழி. ப‌க்க‌த்து ப‌க்க‌த்து வீடு என்றாலும் கூட‌, இடையில் சுவ‌ர் என்று ஒன்றும் கிடையாது. என‌க்கு நினைவு தெரிந்து அவ‌ர்க‌ள் குடும்ப‌த்தின‌ருட‌ன் ப‌ழ‌கும் வாய்ப்பு மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌து. காக்கா க‌றிசாப்பிட்ட‌து அவ‌ர்க‌ளுடைய‌ வீட்டில்தான். குருவ‌ம்மாவுக்கு அடிக்க‌டி சாமி வ‌ரும், ப‌ற்க‌ளை க‌டித்துக் கொண்டு அவ‌ர் நிற்ப‌தை பார்த்தால் அந்த‌ள‌வுக்கு ப‌ய‌மாக‌ இருக்கும் அந்த‌ சிறு வ‌ய‌தில்.. அவ‌ர்க‌ளுடைய‌ சொந்த‌ ஊர் விருதுந‌க‌ர் அருகே க‌ல்லுப்ப‌ட்டி என்ப‌தாக‌ நியாப‌க‌ம். திரும‌ங்க‌ல‌ம் அருகே இருந்த‌தாக‌ நினைவு. அவ‌ர்க‌ளுடைய‌ ஊரில் அந்த‌ ம‌னித‌ர் பெய‌ரை நினைவில் வைத்துக் கொள்ள‌ முடிய‌வில்லை. ப‌ச்ச‌முத்து என்று நினைக்கிறேன். என் மீது அவ்வ‌ள‌வு அன்பு செலுத்தினார். உற‌வின‌ர்க‌ளை விட‌ என்னைப் பார்க்க‌ வ‌ரும் போதெல்லாம் தின்ப‌ண்ட‌ங்க‌ள் என்று ஒன்று இல்லாம‌ல் வ‌ந்த‌தே இல்லை. இல்லையென்றாலும் வெளியே கூட்டிக் கொண்டு போய் கைக‌ளில் நிறைய‌ தின்ப‌ண்ட‌ங்க‌ளுட‌ன் திரும்பிய‌ ஞாப‌க‌ங்க‌ள் இன்னும் வ‌ந்து போகின்ற‌ன‌.. எல்/கே.ஜி.யில் நான் ப‌ரிசு வாங்கிய‌ ப‌ட‌த்தை அவ‌ருடைய‌ வீட்டில் முன் அறையில் மாட்டி வைத்திருந்தார். அவ‌ர் இப்போது எப்ப‌டி? எங்கே ? என்று தெரிய‌வில்லை.. அவ‌ருட‌னான‌ பிரிவு வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ சேர்ந்து வ‌ள‌ர்ந்த‌து... அடுத்த‌தாக‌ எங்க‌ள் தெருவில் இருந்த‌ காந்திம‌தி.. இவ‌ரும் அம்மாவுக்கு ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ம். ஆனால் பின்னாளில் அப்ப‌டி இல்லை. இவ‌ருடைய‌ வீட்டில்தான் என‌க்கு சாப்பாடு... பாட்டி ‍ இந்த‌ உற‌வவை ம‌ட்டும் முழுவ‌துமாக‌ அனுப‌வித்து பார்க்க‌வில்லையே என்ற‌ ஆத‌ங்க‌மும் உண்டு. மாமியார் ம‌ரும‌க‌ள் ச‌ண்டையில் பாட்டி என்ற‌ அந்த‌ உற‌வு என்னை பொருத்த‌வ‌ரைக்கும் விரோதி என்றே க‌ற்பிக்க‌ப்ப‌ட்ட‌து. நான் என்னுடைய‌ பாட்டியை ரொம்ப‌வே மிஸ் ப‌ன்றேன்.. பாட்டி எனறு கூறி வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வில்லை. "கிழ‌வி" என்று சொல்லுமாறு ப‌ணிக்க‌ப்ப‌ட்டேன். அவ‌ரிட‌ம் இருந்து எதையும் வாங்க‌ கூடாது என்று மிகுந்த‌ க‌ண்டிப்பு.. ஆனாலும் வ‌ருத்த‌மாக‌த்தான் இருந்த‌து.. பாட்டி எங்கோ ஒரு உற‌வின‌ர் வீட்டிற்கு சென்று அங்கு இற‌ந்த‌து...அழுகை வ‌ந்த‌து.. பாட்டியை பொருத்த‌வ‌ரை அப்பா த‌ப்பு செய்து விட்டாரோ என்று நினைப்ப‌துன்டு..
அய்யாத்துரை சித்த‌ப்பா‍‍ ‍‍ என்மீது அவ்வ‌ள‌வு பாச‌ம் வைத்திருந்தார். எப்போதாவ‌து வ‌ருவார். ஆனால் இப்போது அப்ப‌டி இல்லை.. எங்கேயாவ‌து பார்த்தால் எப்ப‌டியா இருக்க‌? என்ற‌ பேச்சுட‌ன் முடிந்து விடுகிற‌து. ராமாத்தாள் ‍வீட்டிக்கு ப‌க்க‌த்தில் இருந்த‌ பெண். ல‌ட்சுமி, என்று ப‌ட்டிய‌ல் இருந்தாலும் ப‌ழைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நினைவுக்கு வ‌ர‌ ம‌றுக்கிற‌து
]