Monday, December 28, 2009

ஏதோ தெரியவில்லை.. மனம் மிகவும் பாரமாக..

ம‌ன‌ம் மிக‌வும் பார‌மாக‌ இருக்கிற‌து.. ஏன் என்று தெரிய‌வில்லை.. எப்போதும் இல்லாத‌ அள‌விற்கு விர‌க்தியுட‌ன் ம‌னோ நிலை.. யாரிட‌மும் பேச‌த் தோன்ற‌வில்லை. ம‌ன‌துக்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ள் என்று நினைத்திருப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ இன்று அந்நிய‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌ர். ஏன் என்று கார‌ண‌ம் புரிய‌வில்லை..
வ‌ழ‌க்க‌மாக‌ வ‌ருட‌த்தின் இறுதி நாட்க‌ளில் ச‌ந்தோஷ‌ம் என்னிட‌த்தில் இருந்த‌ நாட்க‌ள் எத்த‌னையோ இருந்த‌ன‌. ஆனால் இப்போது எல்லா நாட்க‌ளும் ஒன்றே என‌ உண‌ர‌ப்ப‌டுகிற‌து. எந்த‌ நாட்க‌ளிலும் ச‌ந்தோஷ‌ம் இல்லை. நான் சிரிக்கிறேன். வாய்க‌ள் ம‌ட்டும், உத‌டுக‌ள் ம‌ட்டும் அத‌ன‌த‌ன் வேலையை செய்கின்ற‌ன‌. ஆனால் உள்ளுக்குள் அமைதியாய் என்னால் என்னை உண‌ர‌ முடிகிற‌து. அதுவே சில‌ நேர‌ங்க‌ளில் ம‌ன‌ விர‌க்திக்கும் கார‌ண‌மாகி விடுகிற‌து. என்ன‌ வாழ்க்கை, ச்சீ என்ன‌ ம‌னித‌ர்க‌ள் என்ற‌ வெறுப்பு. யாரிட‌மும் பேச‌ப்பிடிக்காம‌ல் த‌னிமையை ஏற்ப‌டுத்திக் கொண்டு, உட்கார்ந்திருப்ப‌து.. பின்ன‌ர் அந்த‌ த‌னிமையே வெறுத்தும் போகிற‌து.. அப்போதைய‌ கால‌ கட்ட‌த்தில் ம‌ன‌து தூண்ட‌ப்ப‌டும் ஒரு விஷ‌ய‌ம் த‌ற்கொலை. இத்த‌னை முக‌மூடி ம‌னித‌ர்க‌ளையும், ச‌ராச‌ரி நிக‌ழ்வுக‌ளையும் ச‌கித்துக் கொண்டு ஏன் இந்த‌ வாழ்க்கை.. அன்பு பாச‌ம், உற‌வுக‌ள், ந‌ட்புக‌ள் என‌ எதுவுமே உண்மையாயு இல்லாத‌ போது ஏன்? என்னுடைய‌ பிற்ப்புக்கான‌ கார‌ண‌ம்? இப்போதெல்லாம் என்னுடைய‌ பால்ய‌ ப‌ருவ‌ நிக‌ழ்வுக‌ளை ஏதாவ‌து ஒன்று நினைவுப‌டுத்தி செல்கிறது. அடிக்க‌டி நான் உண‌ருகிறேன். மெல்லிய‌ தூக்க‌த்தில், சின்ன‌ஞ்சிறிய‌ வ‌ய‌தில் என்னை சுற்றி இருந்த‌ வாச‌ங்க‌ள், ம‌னித‌ர்க‌ள், கால‌நிலை என்று அவ்வ‌ப்போது அதை அதிக‌மாக‌ உண‌ருகிறேன். கார‌ண‌ம் தெரிய‌வில்லை. வெறும் வினாக்க‌ள் ம‌ட்டுமே இருக்கின்ற‌ன‌.. விடைக‌ளை தேடி ப‌ய‌ணிக்க‌வும் இல்லை. அதை தேடும் வ‌ழியும் தெரிய‌வில்லை.
கேள்விக‌ளுக்கான‌ விடையை தெரிந்து கொள்ள‌ முடியாம‌லேயே இந்த‌ வாழ்க்கை நின்று போகும். ஒரு நாள் மர‌ண‌ம் என்னை ஆக்கிர‌மிக்கும். அத்துட‌ன் இந்த‌ உண‌ர்வுக‌ள், உண‌ர்ச்சிக‌ள் என‌ அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி. அத‌ன் பிற்கு எந்த‌ எதிர்பார்ப்புக‌ளும் இல்லை, ஏமாற்ற‌ங்க‌ளும் இருக்க‌ போவ‌தில்லை.. இப்ப‌டியாக‌ எல்லாம் சிந்திக்க‌ தோன்றுகிற‌து. போதைப்ப‌ழ‌க்க‌த்திற்கு அடிமையாக‌ இருக்க‌ ம‌ன‌ம் தூண்டப்ப‌டுகிற‌து. ஆனால் கைக‌ளில் காசில்லை. வ‌ர‌லாறு காணாத‌ வ‌றுமை... நானா? இப்ப‌டி என்று சிந்தித்து பார்த்தேன் நேற்று, அழுகை வ‌ந்த‌து. விர‌க்தி வெறும் விர‌க்தி...
ப‌ண‌த்திற்காக‌, பத‌விக்காக‌, உட‌ல் சுக‌த்திற்காக‌, அதிகார‌ சுக‌த்திற்காக‌ அலையும் என்னை சூழ்ந்த‌ இந்த‌ ச‌மூக‌த்தில் எத‌ற்கு ஆசைப்ப‌ட‌ என்று தோன்ற‌வில்லை.. ம‌ன‌ம் சில‌ நேர‌ங்க‌ளில் வ‌ன்முறையாக‌வும், ப‌ல‌ நேர‌ங்க‌ளில் எரிச்ச‌லுட‌னும் இருக்கிற‌து. இறைவா ... என‌க்கு வாழ‌ப்பிடிக்க‌வில்லை... ப்ளீஸ் எஜ்ன்னை சீக்கிர‌ம் அழைத்துக் கொள்ளேன்.
இன்னும் எத்த‌னை வ‌ருட‌ங்க‌ளுக்கு இப்ப‌டியே ந‌டித்துக் கொண்டிருப்ப‌து.. ர‌த்த‌ம், ச‌தை இந்த‌ உட‌ல் என்று இத‌ற்காக‌த்தான் இந்த‌ ந‌டிப்பு. வெறும் உட‌ல் ம‌ட்டிமே வாழ்க்கையை அனுப‌வித்து கொண்டிருக்கிற‌து. அதில் வேண்டா வெறுப்பாக‌ நான் இருக்கிற‌து. எல்லாவ‌ற்றின் மீது ப்ற்று த‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து.
ஒவ்வொரு கால‌த்திலும் ஒவ்வொன்றின் மீது என‌க்கு அள‌வ‌ற்ற‌ ஆசை இருந்த‌து. ப‌ள்ளி கால‌த்தில் க‌த்த, சைக்கிள், தொப்பி, பொம்மை துப்பாக்கி என்று சின்ன‌ச்சின்ன‌ ஆசைக‌ள் இருந்த‌ன‌. ப‌ருவ‌ வ‌ய‌தில் தோன்றிய‌து ஒரே ஆசை க‌விதா. சாப்பாட்டை பொறுத்த‌வ‌ரை வித‌ம வித‌மாய் சாப்பிட‌ வேண்டும் என்ற‌ ஆவ‌ல் இருந்த‌து. ஆனால் இப்போதெல்லாம் எத‌ன் மீதும் ஆசை இல்லை. விருப்ப‌ம் குறைந்து கொண்டே போகிற‌து. செக்ஸ் மீது கூட‌ ஒரு வித‌ வெறுப்பு. உட‌லிய‌ல் சுக‌த்திற்காக‌த்தான் இநத‌ வாழ்க்கையோ என்னும்ப‌டி அதை சுற்றியே ந‌க‌ரும் இந்த‌ ச‌முதாய‌ம்... க‌ண்ணை மூடி தியானிக்க‌ நினைத்தாலும் த‌ற்போது முடிவ‌தில்லை.. எல்லாம் மாயை எல்லாம் பிர‌மை,,, நான் எழுதுகின்ற‌ இந்த‌ எழுத்துக்க‌ளும் ப‌டிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு பிர‌மைதான். என்னைச சுற்றி எல்லாம் மாயை.. மாயை... இந்த‌ உட‌ம்பு, க‌ம்ப்யூட்ட‌ர் என்னை சுற்றிலும் ப்ர‌வி இருக்கும் இந்த‌ ஒளி... என்னுடைய‌ உட‌ல்... நான் பேசும் இந்த‌ மொழி என்னைச் சிந்திக்க‌ தூண்டும் ம‌ன‌ம் என்று சொல்லிக் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் விஷ‌ய‌ங்க‌ள் அனைத்துமே மாயை... மாயை....
என்னுடைய‌ வாழ்க்கையில்; அதாவ‌து நான் இதுவ‌ரை க‌ட‌ந்து வ‌ந்திருக்கும் இந்த‌ 27 வ‌ருட‌ கால‌ ப‌ய‌ண‌த்தின் முடிவு என்று இருக்கும்.. அதைத் தேடி உற்சாக‌மாக‌ என்னுடைய‌ ப‌ய‌ண‌ம் இன்னும் தொட‌ரும்... எது ந‌ட‌ந்த‌தோ அது ந‌ன்றாக‌வே ந‌ட‌ந்த‌து எது ந‌ட‌க்கின்ற‌தோ அது ந‌ன்றாக‌வே ந‌ட‌க்கின்ற‌து.. எது ந‌ட‌க்க‌ இருக்கின்ற‌தோ அதுவும் ந‌ன்றாக‌வே ந‌ட‌க்கும்ப்; கீதை.
27‍ந் தேதி வ‌ண்டியில் சென்று கொண்டிருக்கும் போது வான‌த்தில் பார்த்த‌ காட்சி என‌க்குள் எதையோ உயிர்ப்பித்த‌து. ப‌ல்வித‌மான‌ சிந்த‌னைக‌ள் வ‌ந்து போயின‌. நான் யார்? க‌ண்க‌ளை மூடினால் வெறும் இருட்டாக‌ தெரிகிற‌தே அதுவா> இல்லை, இப்ப‌டி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே ப‌க்க‌த்தில் யாராவ‌து உட்கார்ந்திருப்பார்களோ என‌ நினைத்துக் கொண்டே இய‌ங்குகிற‌தே ஒரு ம‌ன‌ம் அதுவா? என் வாழ்வு சிதில‌ம் அடைந்து கொண்டிருக்கிற‌து. என‌க்கு கொடுத்த‌ உட‌லை நான் சீர‌ழித்து கொண்டிருக்கிறேன என்ப‌து ம‌ட்டும் என‌க்குத் தெரிந்த‌ நிச்ச‌ய‌மான‌ ஒன்று..
இப்ப‌டியாக‌த்தான் இருக்க‌ வேண்டும் வேறு என்ன‌ செய்து விட‌ முடிகிற‌து. எதுவுமெ என்கையில் இல்லாத‌ போது அனுப‌விப்ப‌து ஒன்றைத் த‌விர‌ நான் பெரிதாக‌ என்ன‌ செய்து விட‌ முடியும்...